மாதவிடாய் கோளாறுகளை நீக்கி, உடலுறுப்புகளுக்கு பலம் தந்து, சருமத்துக்கு பாதுகாப்பையும் தரக்கூடிய பூலாங்கிழங்குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இஞ்சியை போலவே, மாம்பழ வாசனை வீசும் இந்த பூலாங்கிழங்குகளுக்குள் நிறைய ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன. அதனால்தான், இதனை வெள்ளை மஞ்சள் என்றும் சொல்வார்கள்.
புற்றுநோய் செல்களை எதிர்ப்பு: மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற பொருள் பூலாங்கிழங்கிலும் உள்ளது. இதனால், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை பெற்றிருக்கிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. குறிப்பாக, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்கும் சக்தி இந்த வெள்ளை மஞ்சளுக்கு உள்ளது. மாதவிடாய் பிரச்சனையையும் சரி செய்வதால், இந்த பூலாங்கிழங்குகளை பெண்கள் தவிர்க்கவே கூடாது.
உடலுறுப்புகளின் ஆரோக்கியம்: நுரையீரல், குடல், இரைப்பை உள்ளிட்ட உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் பூலாங்கிழங்குகள் உதவுகின்றன. சுவாச சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கும், வாயு, அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளுக்கும் இந்த பூலாங்கிழங்கின் பவுடரை பயன்படுத்தி தீர்வு காணலாம்.
பயன்பாட்டு வழிமுறைகள்: பூலாங்கிழங்குகளை காயவைத்து, இடித்து தூளாக்கி மெல்லி துணியில் வைத்து சலித்து வைத்துக்கொள்ளலாம். சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில், இந்த பொடியை சிறிது தேனில் கலந்து சாப்பிட்டால் உடனே பலன் கிடைக்கும். அல்லது வெறும் பூலாங்கிழங்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
காயங்கள் மற்றும் தோல் பிரச்சனைகள்: உடலில் காயங்கள், புண்கள், கட்டிகள் இருந்தால் பூலாங்கிழங்கின் பவுடரை சிறிது நீரில் குழைத்து பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும். இது வாசனை கிழங்கு என்பதால், அழகுசாதன பொருட்களில் மூலப்பொருட்களாக சேர்க்கிறார்கள். முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகளுக்கு இந்த கிழங்கு மருந்தாகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளதால், சுருக்கம் விழும் தோற்றத்தை தள்ளி போடுகிறது. மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடலுக்கு பூசி குளித்து வரலாம். இதனால் சரும தொந்தரவுகளும் அண்டாது.
வாசனை பவுடர்: நாட்டு மருந்து கடைகளில் பூலாங்கிழங்கு விற்கப்படுகிறது. பூலாங்கிழங்குடன், வெட்டிவேர், தாமரை கிழங்கு, சந்தனக்கட்டை, அகில்கட்டை, கோரைக்கிழங்கு போன்ற மூலிகைகளை கலந்து தயார் செய்து விற்கிறார்கள். பூலாங்கிழங்கு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இதை பயன்படுத்தி பலனை அடையலாம்.
முக்கிய குறிப்பு: எதையும் டாக்டரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
இந்த பயனுள்ள தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.