தினசரி கேரட் ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. கேரட் A, C, B3, K, B6 போன்ற அரிய வைட்டமின்களும், பையோடின், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதனுடன் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்களும் அடங்கியுள்ளன. கேரட்டில் உள்ள நன்மைகள் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சாதகமாகும் மற்றும் சில நோய்களை முன்கூட்டியே தடுக்கும் திறன் கொண்டது.
புற்றுநோய்:கேரட்டில் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் உள்ளன. ஆய்வுகள், கேரட் சில புற்றுநோய்க்கு காரணமாகும் தொற்றுக்களை தடுப்பதாகவும், புற்றுநோய் செல்களை அழிப்பதாகவும் கூறுகின்றன. கீமோ தெரபி சிகிச்சை பெறுவோருக்கு கேரட் ஜூஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் எடை குறைவு: நார்ச்சத்து நிறைந்த கேரட் உடல் எடை குறைய உதவும். பீட்டா கரோட்டீன், ரத்தத்தில் உள்ள கொழுப்பை எளிதாக கரைக்கும். மேலும் கேரட்டில் குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவும்.
கண் நலம்: வைட்டமின் A கண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. கேரட்டை சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும் மற்றும் கண் கோளாறுகள் தவிர்க்கப்படும்.
சரும நலம்: வைட்டமின் C சரும சேதத்தைத் தடுக்க உதவும். கேரட் ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாகி, அழகு கூடும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும்.
இதய ஆரோக்கியம்: கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இதயத்தசைகள் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் இதய நோய்களை தடுக்கும் திறன் உள்ளது. மேலும், கல்லீரலில் தேங்கும் நச்சுக்களை அகற்றும் திறனும் கேரட் ஜூஸுக்கு உண்டு. மஞ்சள் காமாலை, மலேரியா, டெங்கு போன்ற நோய்களுக்கு கேரட் ஜூஸ் உதவிகரமாக உள்ளது.
வயிறு பிரச்சினைகள்: மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கேரட் ஜூஸ் நல்லது. டயட்டில் கேரட் ஜூஸை சேர்த்து கொள்ளலாம். ஜூஸ் சர்க்கரை சேர்க்காமல், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.
கால்சியம்: கேரட் ஜூஸில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். பால் சேர்த்து குழந்தைகளுக்கு குடுப்பதால், கால்சியம் அதிகமாக உடலில் சேரும். எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலம் தரும்.
ஆண்மை சக்தி: பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் சேர்த்து சாப்பிடுவது ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.
சர்க்கரை நோய்: கேரட்டில் உள்ள இனிப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும். சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறது. ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும்.
இந்த எளிய, ஆனால் சக்திவாய்ந்த காய்கறியை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.