முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக இருக்கும் சியோமி கடந்த 5 வருடமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும், விற்பனையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த நிறுவனம் அனைத்து மக்களிடமும் ஸ்மார்ட் போன் சென்று ஆடிய மிக முக்கிய காரணமாக இருந்தது
இப்பொது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கிய இந்த நிறுவனம் குறைந்த விழியில் கார்களை தயாரிக்க முடிவு செத்துள்ளது இதற்கான பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறது.
சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய எலக்ட்ரிக் கார் எஸ்யூ7. இது ஸ்போர்ட்ஸ் காரான போர்ஷ்-க்கு இணையாக இருக்கும் காரணத்தாலும் விலை குறைவாக இருக்கும் காரணத்தாலும் சீன மக்கள் மத்தியில் எஸ்யூ7 கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எஸ்யூ7 காரை சனிக்கிழமை வரை, 70,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக லெய் ஜூன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
2024 இல் 1 லட்சம் கார்கள் விற்பனை இலக்கு: என்பதை லூ வீபிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் லெய் ஜூன் பகிர்ந்த முக்கிய தகவல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1 லட்சம் எஸ்யூ7 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய சியோமி இலக்கு வைத்துள்ளது. கடந்த வாரம், திட்டமிட்டதை விட முன்பாகவே கார்களின் டெலிவரியைத் தொடங்கியிருப்பதாக லூ வீபிங் அறிவித்திருந்தார்.
சியோமி தனது எலக்ட்ரிக் காரான எஸ்யூ7 காரை, சீன எலக்ட்ரிக் கார் சந்தையில் கவனத்தை ஈர்க்கும் வகையில், அதன் அடிப்படை மாடல் காரின் விலை, டெஸ்லா மாடல் 3 விட 4,000 டாலர் குறைவாகவும், 30,000 டாலருக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி லாபம் எதிர்பார்க்காமல் ஆரம்ப கட்ட வாடிக்கையாளர்களுக்காகக் கூடுதல் அம்சங்களுடன் வழங்கப்பட்ட “ஃபவுண்டர்ஸ் எடிஷன்” என்ற 5,000 கார்களை சியோமி ஏற்கனவே உற்பத்தி செய்திருந்தது. இதில் ஒரு சில கார்களின் டெலிவரி ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கியது. ஆனால், முழுமையான ஸ்டாண்டர்டு மாடல்களின் டெலிவரி கடந்த வியாழக்கிழமை பெய்ஜிங் மற்றும் ஷென்ஜென் நகரங்களில் தொடங்கியுள்ளது.
சியோமி எஸ்யூ7 மீதான வரவேற்பு மிகவும் சிறப்பாக உள்ளது. நிறுவனத்தின் விற்பனை இலக்கை எட்ட முடியுமா என்பதை பார்ப்போம். போட்டி நிறைந்த சீன எலக்ட்ரிக் கார் சந்தையில் சியோமி தனது இடத்தை எவ்வாறு பிடிக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம். இதன் வாயிலாக எலான் மஸ்க் டெஸ்லா கார்களின் விற்பனை சரிந்ததைத் தொடர்ந்து ,டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவில் மாடல் Y, மாடல் X, மற்றும் மாடல் S கார்களின் விலையை குறைத்தது. இதனை தொடர்ந்து சீனாவிலும் கார்களின் விலையை குறைத்திருக்கிறது. மாடல் 3 காரின் விலையை 14,000 யுவான் குறைத்து, 2,31,900 யுவான் என அறிவித்துள்ளது. மாடல் Y காரின் விலை 2,49,900 யுவான், மாடல் S காரின் விலை 6,84,900 யுவான் மற்றும் மாடல் S பிளெய்டு 8,14,900 யுவான் என கணிசமான அளவு விலை குறைக்கப்பட்டுள்ளது.